மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மாமாங்கம் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை பாரிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
- Advertisement -
இதன்போது, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமுர்த்தி மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாமாங்கம் பிரதேச கிராம மட்ட சங்கங்களின் பிரதிநிதிகள், உறுப்பினர் ஆகியோரினால் இவ் பாரிய டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் உதயகுமார், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ரமேஷ்குமார், மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் கிஷாந்தராஜா, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோக்தர்கள் மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
- Advertisement -