-கல்முனை நிருபர்-
இம்முறை இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மண்முனை பற்று புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் யோகேந்திரன் ஷதீஸ்காந் முதலாம் இடம்பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இம் மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் குலேந்திரராசா தலைமையில் நடைபெற்றது.
இதில் பிதரம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார்.
அத்தடன் கோட்டக்கல்விப் பணிப்பாளர், கோட்டப்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் முதற்தடவையாக அகில இலங்கை மட்ட விளையாட்டுப்போட்டியில் பளுதூக்கலில் முதற்டவையாக தங்கப்பதக்கம் சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.