கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் 96 வீதமான மாணவர்கள் சித்தி

-கல்முனை நிருபர்-

 

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் க.பொ.த. சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும், கிராமத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ள மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான பி.புவனேஸ்வரி, ஆர்.சண்முகநாதன் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றிய 96.6 வீதமான மாணவர்கள் சித்தி பெற்று உயர்தரம் கற்க தகதி பெற்றுள்ளனர்.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயமானது அதிபர் க.செல்வராசா வழிகாட்டலில் கற்றல், கற்பித்தல் மற்றும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் சிறப்பாக இயங்கிவருகின்றது.

இப்பாடசாலையில் க.பொ..த சாதாரண தரப்பெறுபேறுகளின் படி கோ.சலுஜின் 9A,  சு.அபிஷேகா 9A, ப.கிஷோபிரகித் 8A,B, ரூ.அனோசித் 8A, பி,  உ.ஷதுனா 8A,B,  ஜி.வேணுஷஜித் 8A,C,  ர.விஸ்வா 8A,C, உ.சிவஷாகரன் 7A,B,C,  ம.கோபிஷனன் 6A, 3b, பி.ஜர்ஷனா 6A,3B,  கீ.டினோஜன் 6A,B,2C, வி.யுதேஷாந் 6A,B,2C, நே.டினோஜன் 5A,3B,C, உ.கிருஷிகா 5A,3B,C ஆகிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.