பசில் ராஜபக்சவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட விஜயத்திற்காக வெளிநாடு சென்றிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச அண்மையில் நாடு திரும்பியது தொடர்பான விமான நிலைய விவகாரங்கள் தொடர்பில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பசில் ராஜபக்சவும் அவரது மனைவியும் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி டெர்மினலை பயன்படுத்தி விமான நிலையம் மற்றும் விமான நிறுவனத்திற்கு 400 டொலர்களை செலுத்தியுள்ளனர்.
- Advertisement -
பசில் ராஜபக்ச நாட்டிற்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில். அன்றைய தினம் அவரை வரவேற்க கணிசமான மக்கள் வந்திருந்த நிலையில். அவர்களில் சிலர் அனுமதியுடன் பிரமுகர் முனையத்தின் லாபிக்கு வந்திருந்தனர்.
அதன்பின், அவர்களுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டணங்கள் பசில் ராஜபக்ஷவினால் செலுத்தப்பட்டதாகவும், அந்த கட்டணங்கள் விமான நிலையத்தினாலும் விமான நிறுவனத்தினாலும் செலுத்தப்பட்டதாக பரப்பப்படும் தகவல்கள் பொய்யானவை எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -