அறநெறி பாடசாலைகள் சம்பந்தமாக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடல் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
இச்சந்திப்பின் போது இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளர் வை.அனிருத்தன், சர்வதேச இந்து மத பீட செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியின் இந்த விவகார இணைப்பாளருமான கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மாவும் கலந்து கொண்டிருந்தார்.
அறநெறி பாடசாலைகள் சம்பந்தமாக மாணவர்களையும் அறநெறி ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சி நிரல்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
- Advertisement -
மேலும் கிளிநொச்சியில் ஸ்ரீவித்யா குருகுலத்துக்கான அந்தணர் பாடசாலை காணி பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்துவதும் ஐயப்ப பக்தர்கள் இந்திய இலவச விசா பெறகின்றபோது அவர்களிடம் காப்புறுதி கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு பாபு சர்மா கொண்டு சென்றிருந்தார்.ஏனைய மதத்தவர்களுக்கும் இவ்வாறான காப்புறுதி இருக்கின்றது .இதன் காரணமாக இந்த ஐயப்ப காலத்தில் அவர்கள் இக்காப்புறுதி திட்டத்தினை முன்கொண்டு செல்கின்றார்கள்.
மேலும், இது பற்றிய பூரண விபரங்கள் தனக்கு கிடைத்ததும் ஆவணம் செய்வதாக தெரிவித்திருந்தார். எனினும் கொரோனா காலம் என்பதினால் இக்காப்புறுதி திட்டம் ஏனைய மதங்களுக்கும் இவ்வாறான சமய யாத்திரைகளுக்கு இருப்பது போல இந்து மத யாத்திரைகளுக்கும் இக்கஷ்டமான காலத்தில் இருப்பது ஐயப்ப பக்தர்களின் நலன் கருதியே என்பதை அவர்கள் கருத்தில் எடுத்துக் கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.
மேலும், இது பற்றி அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுடன் தான் கலந்துரையாடுவதாகவும் மேலும் வேறு விடயங்கள் இருந்தால் எந்த நேரத்திலும் கலந்துரையாட ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் இந்து கலாச்சார அமைச்சராக இருந்த காலத்தில் கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி இலங்கையின் துணை தூதரகம் ஒன்றை நிறுவுவது பற்றியும் அதேபோன்று ஐயப்ப பக்தர்களுக்கான கப்பல் சேவையும் ஏற்பாடு செய்வதற்கான முயற்சியையும் மேலும் துரிதப்படுத்த வேண்டும் எனவும் பாபு சர்மா தெரிவித்திருந்தார்.
- Advertisement -