ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட 2 இந்தியர்களுடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதான குறித்த சந்தேக நபர் காத்தான்குடி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் 2022 இல் தமிழகம் கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய பொலிஸாரால் கைதான 2 பேருடன் அவர் தொடர்பிலிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.