Sri Lanka Tamil News Site

இறைச்சிக்காக மாடு வெட்டியவர் கைது

- Advertisement -

-யாழ் நிருபர்-

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நெடுங்காடு பகுதியில் இறைச்சிக்காக மாட்டினை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் நேற்று புதன்கிழமை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவல் அரண் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றிவளைப்பின்போது இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் வீட்டின் உரிமையாளர் மாட்டு இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

- Advertisement -