கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எல்டப் மேற்பிரிவில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, எல்டப் மேற்பிரிவிற்கு விரைந்து சந்தேகத்திற்கு இடமான வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது, வீட்டினுள் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 156,000 மில்லி லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டதோடு, 44 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
- Advertisement -
கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேக நபருக்கு எதிரான வழக்கு நாளை வியாழக்கிழமை பசறை நீதிவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-பதுளை நிருபர்-
- Advertisement -