இரு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் கசிப்புடன் கைது

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு பகுதிகளில், இரண்டு இளைஞர்கள் 40 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று வியாழக்கிழமை இக்கைது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரில் ஒருவர் 30 லீற்றர் கசிப்புடனும், மற்றையவர் 10 லீற்றர் கசிப்புடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீட்கப்பட்ட கசிப்புடன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.