பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்-

தோப்பூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் 230 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட தோப்பூர் பிரதேச மாணவமாணவிகளை பாராட்டி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது.

தோப்பூர் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.பீ.எம்.பஸீர் (ஆசிரியர்) தலைமையில் இவ் பாராட்டு விழா இடம்பெற்றது.

இதன் போது பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்ட 55 மாணவ மாணவிகள் பதக்கமும்,நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஹாபிஸ் மரிக்கார் கலந்து சிறப்பித்தார்.

ஏனை அதிதிகளாக தோப்பூர் பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், அதிபர் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்