அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, கணினி ஊடுருவல்காரர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களை உடனடியாகப் பரிசோதனைக்கு உட்படுத்தி, அது குறித்த விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க பகுப்பாய்வாளருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.