
போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட மதுபானங்கள் விற்பனை
பல்லாயிரக்கணக்கான மதுபான போத்தல்கள் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சில மதுபான உற்பத்தியாளர்களும், மதுவரி திணைக்கள அதிகாரிகளும் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர் மோசடியின் பின்னணியில் உள்ளனர்.
வழக்கமான பார்கோட் போலல்லாமல் குறித்த பாதுகாப்பு ஸ்டிக்கர்களை சாதாரண ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி பொது மக்கள் படிக்க முடியாது.
இதற்கு மதுவரித்திணைக்களத்திடம் உள்ள சிறப்பு சாதனம் தேவைப்படுகிறது, போலியான மது போத்தல்களை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களுக்கு வழியில்லை, என அவர் தெரிவித்தார்.