முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன சற்று நேரத்திற்கு முன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்த பின்னரே அவர் இவ்வாறு வெளியேறியுள்ளார்.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணையில் வாக்குமூலம் வழங்குவதற்காக, ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமைய அவர் இன்று செவ்வாய்க்கிழமை அங்கு முன்னிலையாகியிருந்தார்.
அதன்படி, குறித்த வாக்குமூலத்தை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது