நாட்டின் விமான போக்குவரத்து துறையை மறுமலர்ச்சி செய்யவும், தென் பிராந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை மையப்படுத்தி பாரிய முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விமான நிலையத்தின் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் வணிக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சரக்கு கையாள்கை (Cargo), விமான திருத்தப்பணிகள் , விமான உதிரிபாகங்கள் உற்பத்தி, களஞ்சியசாலைகள், மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் போன்ற பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய முடியும்.
இதற்கான விருப்பம் தெரிவிக்கும் ஆவணங்களை எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கான விசேட தெளிவுபடுத்தல் மற்றும் மத்தள விமான நிலையத்திற்கான கள விஜயம் மே மாதம் 22ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அண்மையில் விமான நிலையம் அமைந்துள்ளதால், கடல் மற்றும் வான்வழி போக்குவரத்துகளை இணைக்கும் ஒரு முக்கிய வர்த்தக மையமாக இதனை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் இது தொடர்பான மேலதிக விபரங்களை www.airport.lk என்ற இணையதளத்தில் அல்லது +94 112264400 / +94 763963000 ஆகிய தொலைபேசி எண்கள் ஊடாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தை (AASL) தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.