காலி துறைமுகம், மாகல்ல மற்றும் சம்போதி சந்தி ஆகிய பகுதிகளில் கணினி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 23 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி துறைமுக பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 முதல் 47 வயதுக்கு இடைப்பட்ட இந்திய மற்றும் நேபாள நாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 10 கணினிகள் மற்றும் 32 கைத்தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்