நாட்டில் வளி மாசடைவு மீண்டும் அதிகரிப்பு

நாட்டின் பல பகுதிகளில் வளி மாசடைவு தொடர்பான காற்றின் தரச்சுட்டெண்ணில் இன்று திங்கட்கிழமை மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி,  இன்று நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் கொழும்பில் காற்றின் தரச்சுட்டெண் 95 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம், கம்பஹாவில் 141 புள்ளிகளாகவும், கண்டியில் 138 புள்ளிகளாகவும் நீர்கொழும்பில் 107 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது.

அவ்வாறே தம்புள்ளையில் காற்றின் தரம் 70 புள்ளிகளாகவும் இரத்தினபுரியில் 59 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

100 முதல் 150க்கு இடைப்பட்ட காற்றின் தரச்சுட்டெண் அளவானது, சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.