-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் புத்தூரில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன், திடீரென குறுக்கே சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியின் மீது ஏறியதில், முச்சக்கரவண்டியில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் கால்கள் நசுங்கி படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.
புத்தூர் கிழக்கை சேர்ந்த வாசன் கஜாணன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஏனைய இரு இளைஞர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரனைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்