மட்டு காத்தான்குடியில் விபத்து: 2 பேர் காயம்

மட்டக்களப்பு காத்தான்குடி, பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதுடன், வாகனமும் சேதமடைந்துள்ளது.

கல்முனையைச்சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொலனறுவையிலிருந்து கல்முனைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவர்கள் பயணித்த வேன் காத்தான்குடி முதலாம் குறிச்சி பிரதான வீதியில் உள்ள பூச்சாடி ஒன்றில் மோதுண்டு இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வேனின் சாரதியும் அதில் பயணித்த சிறு பிள்ளை ஒருவரும் சிறிய காயத்துக்குள்ளாகியுள்ளதுடன் வேனின் முன்பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளது.

காயமடைந்தவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலீஸ் நிலைய போக்குவரத்து பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்