-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை-மஹதிவுல்வெவ பகுதியில் முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
நேற்று புதன்கிழமை மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தொன்றில் ஏற்கனவே கால் உடைந்த நிலையில் முறிவு வைத்தியரிடம் சென்று மருந்து கட்டிவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மஹதிவுல்வெவ- விகாரகம பகுதியைச் சேர்ந்த 44 வயது மற்றும் 38 வயதுடைய இருவர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.