-கொழும்பு-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது விரும்பத்தக்கது என்று கூறியிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியை தான் அனுபவித்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அரசியல் நிலைவரம் நன்றாக இருக்கிறது.நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிடுவது நல்லது என்று கூறினார்.
ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என்று முழு நாடுமே கேட்பதால் அதை ஒழிக்கவேண்டும். எந்த தேர்தல் நடந்தாலும் எமது வேட்பாளர் வெற்றிபெறுவார்.
எமது வேட்பாளர் சரியான நேரத்தில் மேடைக்கு வருவார் என்று கூறிய ராஜபக்ச தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து கருத்து தெரிவிக்கையில், அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் இந்தியா போன்ற நாடுகளுடன் இரு தரப்பு உறவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை தேசிய மக்கள் சக்தி இறுதியில் விளங்கிக் கொண்டுள்ளது என்று கூறினார்.