கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு

-அம்பாறை நிருபர்-

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் பஜாஜ் டிஸ்கவர் மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்டுள்ள EP XJ 1724 என்ற இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மோட்டார் சைக்கிள் வேறு பகுதியில் இடத்தில் இருந்து ஏதேனும் குற்றச் செயலுக்கு கொண்டுவரப்பட்டதா அல்லது களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்