மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் பாற்குடபவனி

மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் பாற்குடபவனி இன்றையதினம் புதன் கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையில் பிரசித்தமான ஆலயங்களில் ஒன்றான ஈழத்து திருச்செந்தூர் முருகனின் பாற்குடபவனியானது கல்லடி உப்போடை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலையத்திலிருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஆரம்பமானது.

48 நாள் மண்டலாபிஷேக பூஜையினை தொடர்ந்து இன்றைய தினம் பாற்குடபவனியானது நூற்றுக்கும் மேற்பட்ட பக்த அடியார்களின் அரோகரா கோஷங்களோடு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்