மட்டக்களப்பில் இளம் யுவதி ஒருவர் காதலனால் ஏமாற்றப்பட்ட நிலையில் தற்கொலை செய்துள்ளார்.
மட்டக்களப்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரான லக்சிக்கா (வயது – 24) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
குறித்த யுவதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த காதலனான பொலிஸ் உத்தியோகத்தரால் ஏமாற்றப்பட்ட நிலையில் சமூக வலைத் தளங்களில் காதலனின் புகைப்படங்களை பகிர்ந்து தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கூறி பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளார்.
இதேவேளை குறித்த காதலன் தன்னை ஏமாற்றியதாக பொலிஸாரிடம் முறைப்பாடும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த முயற்சி கை கூடாததால் குறித்த பெண் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்