மன்னார்- முருங்கன் பிரதான வீதியில் திடீரென வந்த யானை

 

-மன்னார் நிருபர்-

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் காட்டு யானை ஒன்று இன்று புதன்கிழமை காலை திடீரென வீதிக்கு வந்தமையினால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

முருங்கன் பண்ணையின் பின் பகுதியூடாக வந்த குறித்த யானை பண்ணையின் முன் பகுதிக்கு வந்து பண்ணையின் சுற்று வேலி யை உடைத்துக் கொண்டு மன்னார்-முருகன் பிரதான வீதிக்கு வந்து சிறிது நேரத்தின் பின் வீதியை கடந்தது.

இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் குறித்த யானை காட்டு பகுதிக்குள் சென்றது.

கடந்த சில நாட்களாக மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் இரவு பகல் பாராது காட்டு யானையின் திடீர் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் மக்களை அவதானமாக பயணிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்