கண்டி மாவட்டம் கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருகெலே பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை குளவி கொட்டுக்கு இலக்காகி 9 மாணவ, மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 4 மாணவர்களும் 5 மாணவிகளும் உள்ளடங்குகின்றனர்.
6, 7 மற்றும் 9 வயதுடைய மாணவ, மாணவிகளே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள காணி ஒன்றில் உள்ள மரமொன்றில் இருந்த குளவி கூடு கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கம்பளை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.