‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டத்தின் கீழ் நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 708 சோதனைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு சந்தேகநபருக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை 11 ஆகும்.
அத்துடன், மேலும் நால்வரை புனர்வாழ்விற்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.