நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்சிபடுத்தாத 50 பேக்கரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று திங்கட்கிழமை இந்த சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
இதன் அடிப்படையிலேயே குறித்த பேக்கரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.