-பதுளை நிருபர்-
பதுளையில் சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஜன உதான கம்மான யப்பாம ஹொப்டன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 வயதும் 6 மாதமும் கொண்ட சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுமி தனது வீட்டுக்கு அயல் வீடான சந்தேக நபரின் வீட்டுக்கு விளையாடுவதற்காக செல்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும் கடந்த 23 ஆம் திகதி குறித்த சிறுமியை சந்தேக நபர் தனது வீட்டில் அறை ஒன்றுக்கு கூட்டிச் சென்று கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாகவும் 23 ஆம் திகதி தொடக்கம் 4 நாட்களாக தொடர்ந்தும் இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக சிறுமி தாயாரிடம் கூறியதைக் தொடர்ந்து குறித்த சிறுமியின் தாயாரினால் நேற்று முன்தனம் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்தே சந்தேக நபர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிறுமியின் தூரத்து உறவு முறையில் சித்தப்பா என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரை நேற்றைய தினம் சனிக்கிழமை பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய பின்னர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.