45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசியை திருடியவர் கைது

-யாழ் நிருபர்-

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் ஒருவருடைய 45ஆயிரம் ரூபா பெறுமதியான கைப்பேசி கடந்த சில தினங்களுக்கு முன்னர் களவாடப்பட்டிருந்தது.

இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்