நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 230 புனர்வாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இந்த புனர்வாழ்வு நிலையங்களின் சேவைகள் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்