
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம்
-நானு ஓயாநிருபர்-
மலையகத்தின் மூத்த அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 25ஆவது சிரார்த்த தினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
பழைய பாராளுமன்ற கட்டட தொகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனில் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
