புகையிரதத்தில் கண்டெடுக்கப்பட்ட பையில் வெடிபொருட்கள்
அம்பாந்தோட்டை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை புகையிரதத்தில் இருந்து வெடிபொருட்களுடன் கூடிய பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெலியத்தையிலிருந்து கண்டிக்கு செல்லும் அதிவேக புகையிரதம் இன்று காலை 6.30 மணியளவில் பெலியத்தை புகையிரத நிலையத்தில் வழமை போன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் இருக்கைக்கு அடியில் கறுப்புப் பையொன்றை ரயில்வே ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் பெலியத்த பிரதான புகையிரத நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த பையிலிருந்து துப்பாக்கியின் மகசீன் ஒன்றும் துப்பாக்கி தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பில் பெலியத்த பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், பெலியத்த நிலையத்தில் புகையிரதம் சோதனையிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பெலியத்தயிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் புகையிரதம் தாமதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.