-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயம் நடத்திய சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,ஆரம்பத்தில் ஆசிரியர்கள் பாடசாலை நுழைவாயிலிலிருந்து மாணவர்களால் அழைத்து வரப்பட்டனர்.
தொடர்ந்து மாணவர்களுக்கிடையே பலூன் ஊதி உடைத்தல்,சமநிலையில் நடத்தல்,போத்தலில் நீர் நிரப்புதல்,காலில் கட்டப்பட்ட பலூனைப் பாதுகாத்தல்,சங்கீதக் கதிரை ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டது.
அடுத்து அரங்கேறிய ஆசிரியர் தின நிகழ்வில் ஆசிரியர்களால் கவிதை,பாடல்கள்,கதைகள் நிகழ்த்தப்பட்டன.
