2 மாடி கட்டிடத்தில் தீப்பரவல்

மொரட்டுவ, கட்டுபெத்தவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இன்று ஞாயிற்று கிழமை தீ பரவியுள்ளதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்யும் நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், மொரட்டுவ மாநகரசபையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதேவேளை மொரட்டுவை பொலிஸாரும், அருகில் வசிப்பவர்களும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்