-மட்டக்களப்பு நிருபர்-
புலனாய்வு ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன எழுதிய “1981 யாழ்ப்பாணத்தைத் தீயிடுதல்- ஒரு வன்முறை அரசின் ஆரம்பம்” எனும் நூலின் அறிமுகமும்,உரையாடலும் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு கோட்டைமுனை மெதடிஸ்த ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
சமூக செயற்பாட்டாளர் எஸ்.கமலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள்,அரசியற் கட்சிப் பிரமுகர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு இந்நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு நூல் வழங்கப்பட்டது. இதனை செல்லையா மனோரஞ்சன் மொழி பெயர்ப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.