18 முதல் 25 வயதினருக்கு இனி ஆணுறைகள் இலவசம்

பிரான்ஸ் அதிபராக இமானுவேல் மேக்ரான் 25 வயதிற்கு குறைவான பெண்களின் கருத்தரிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் மருந்துக் கடைகளில் ஆணுறையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

“கருத்தடையில் இது ஒரு சிறிய புரட்சி” என்று தனது அரசின் முடிவை புகழ்ந்துள்ள மெக்ரான் 25 வயதுக்கு குறைவான பெண்கள் மத்தியில் கருத்தரிப்பை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்படுவதாகக் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் 18 முதல் 25 வயது கொண்ட இளைஞர்களுக்கு மருந்து கடைகளில் ஆணுறை இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் 18 ற்கும் குறைவான பெண்களுக்கு கருத்தடை சாதனங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளன.

பாலியல் நோய்கள் அதிகரித்து காணப்பட்டதால், 2018ஆம் ஆண்டில் பிரான்ஸில் மருத்துவரின் மருத்துவ சீட்டு மூலம் ஆணுறைகள் சலுகை விலையில் வழங்கப்பட்டு வந்தநிலையில் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக 18 முதல் 25 வயதினர் மருத்துவரின் சீட்டு இல்லாமலேயே இனி ஆணுறைகளை பெற்றுக்கொள்ளலாம்.