குழந்தையை தூங்கவைக்க 119 அவசர இலக்கத்திற்கு அழைத்த தாய்

தாய் ஒருவர் தனது பிள்ளை, தன்னையும் மற்ற பிள்ளையும் துன்புறுத்துவதாக பொலிஸ் அவசர இலக்கத்துக்கு அழைத்து முறையிட்ட நிலையில், பொலிஸார் வீட்டிற்கு வந்து விசாரித்த போது தான் நித்திரை கொள்ளசெய்வதற்கு விளையாட்டாக பயமுறுத்துவதற்கு தொலைபேசி அழைப்பு எடுத்தாக தாய் பொலிஸாருக்கு கூறியுள்ளார்.

இச்சம்பவம் தம்புள்ளையில் இடம்பெற்றுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இருவர் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற வீட்டிற்கு பதினைந்து கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருந்து அவரது வீட்டிற்கு நள்ளிரவு வேளையில் சென்றுள்ளனர்.

அங்கு சென்ற பொலிஸாருக்கு, தனது பிள்ளை மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும், இரவு சீக்கிரம் தூங்கச் செல்லுமாறு கூறியும், தூங்காமல் பல்வேறு செயல்களில் ஈடுபடுவதாகவும், மற்ற குழந்தைகளையும், அம்மா மற்றும் அப்பாவை தூங்க விடாமல் செய்வதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்றபோது, ​​நள்ளிரவை நெருங்கிவிட்டதால், இந்த பிள்ளைக்கு இரவு எத்தனை மணிக்கு தூங்க ஒதுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கேட்டனர்.

அங்கு மாலை சுமார் 6:30 மணிக்கு குழந்தைகள் தூங்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.

முன்னதாக உணவு சமைத்து அவர்களை தூங்க வைப்பேன் என்றும், 3 வயது குழந்தை இணங்காததால், அவரை தூங்க வைக்க பயமுறுத்துவதற்காக இந்த தொலைபேசி அழைப்பை செய்ததாகவும் அவர் பொலிசாரிடம் கூறினார்.

இவ்வாறான சிறு சிறு சம்பவங்களில் பொலிஸாரின் நேரமும் பொதுமக்களின் பணமும் வீண் விரயமாகிறது என தாயாரை கடுமையாக எச்சரித்த பொலிஸார், இனிமேல் இவ்வாறான செயல்களைச் செய்ய வேண்டாம் என எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.