-யாழ் நிருபர்-
உலகளாவிய சிறுவர்களின் நிம்மதியான உறக்கத்துக்கான கனேடிய சமூக சேவை அமைப்பின் அனுசரணையில், யாழ்ப்பாணம் ரோட்டரக்ட் கழகம் மற்றும் களனி ரோட்டரி கழகம் ஆகியவற்றின் இணைந்த செயற்திட்டத்தில் இன்றையதினம் வலிகாமம் பாடசாலைகளில் கல்வி பயிலும் 1004 மாணவர்களுக்கு சப்பாத்து, நுளம்பு வலை, பாய் மற்றும் புத்தகப் பை என்பன வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் 2000 மாணவர்களுக்கு மேற்குறித்த பொருட்களை வழங்குவதே திட்டமாக காணப்படுகிறது. அந்தவகையில் முதற்கட்டமாக இன்றையதினம் 1004 மாணவர்களுக்கு (13 பாடசாலை) சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் வைத்து வழங்கப்பட்டதுடன், நாளை 9 பாடசாலைகளில் கல்வி பயிலும் 996 மாணவர்களுக்கு புனித பத்திரிசியார் கல்லூரியிலும் வைத்து வழங்கப்படவுள்ளது.
வட்டுக்கோட்டை ரோட்டரக்ட் கழகத்தின் தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்களது நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
