நடனமாடிய 10 பேர் திடீரென உயிரிழப்பு

இந்தியா-குஜராத்தில் இடம்பெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பு காரணமாக குறித்த 10 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது உயிரிழந்தவர்கள் இளம் வயது மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நவராத்திரி ஆரம்பமாகி முதல் 6 நாட்களில் கர்பா நடனமாடிய 609 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்