பேருவளை – மாகல்கந்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 303.500 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.