-பதுளை நிருபர்-
பதுளையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிமடை,வெள்ளவத்தை, பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய வெலிமடை நகரில் வைத்து குறித்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்திய போது சந்தேக நபர் சூட்சுமமான முறையில் கைவசம் மறைத்து வைத்திருந்த 2100 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை இன்றைய தினம் புதன் கிழமை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெலிமடை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.