ஹாலோவீன் விழாவில் சிக்குண்டு இதுவரை 120 பேர் பலி

தென் கொரியாவில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஹாலோவீன் விழாக்களில் சிக்குண்டு குறைந்தது , இதுவரை 120 பேர் பலியாகியுள்ளதாக யோங்சான் தீயணைப்புத் துறைத் தலைவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவத்தின் போது குறைந்தது 100 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்றும் சர்வதேச செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறப்புகளுக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில் , சனநெரிசலில் அகப்பட்டும் , மாரடைப்பினாலும் பலர் இறந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் ஹாலோவீன் கொண்டாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு பேரிடர் மருத்துவ உதவிக் குழுவை அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் இன்னும் சரியான விபரங்களை வழங்கவில்லை.