ஹபராதுவ பகுதியில் விகாரையொன்றுக்கு அருகில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைகளுக்காகக் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
34 மற்றும் 49 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இரண்டு பேரினால் குறித்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராது வபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்