ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஸ்ரீ மகா போதியைத் தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி உள்ளிட்ட தரப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை காலை புத்தகயாவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது சித்தார்த இளவரசர் ஞானம் பெற்ற இடத்தில் அமைந்துள்ள மகா விகாரை மற்றும் ஸ்ரீ மகா போதி என்பவற்றைத் தரிசித்து ஜனாதிபதி ஆசி பெற்றுக்கொண்டார்.
இந்திய மகாபோதி சங்கத்தின் பொதுச் செயலாளர் பெலவத்தே சீவலி தேரர், சாரநாத் மையத்தின் விகாராதிபதி ரத்மல்வல சுமித்தானந்த தேரர் ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆசிர்வாதம் வழங்கினர்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்