ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இன்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாணவர்களும் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.