விமானி அறை நெறிமுறைகளை மீறியதற்காக விமானிக்கு எதிராக விமான நிறுவனம் விரைவான நடவடிக்கை எடுத்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரமதிப்பீட்டு நிறுவனமான AirlineRatings.com, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 7 நட்சத்திர அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த செப்டம்பரில், சிட்னியில் இருந்து கொழும்புக்கு 10 மணி நேர விமானப் பயணத்தின் போது, தனது பெண் துணை விமானியை அறையில் வைத்து பூட்டிய சம்பவம் காரணமாக, AirlineRatings.com, விமான நிறுவனத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டை ஏழிலிருந்து ஆறு நட்சத்திரங்களாகக் குறைத்தது.
இதற்கு பதிலளித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், சம்பவத்துடன் தொடர்புடைய கேப்டனை தரையிறக்கியது. மேலும், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.