வைத்தியசாலையில் குழந்தைகள் மீது இடிந்து விழுந்த கூரை

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையின் குழந்தைகள் விடுதியின் கூரை இன்று செவ்வாய் கிழமை விழுந்ததால் அங்கிருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வேறு விடுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியின் போது, ​​கட்டடத்தின் மேற்பகுதிக்கு இயந்திரம் மூலம் கொன்கிரீட் கலவை கொண்டு செல்லப்பட்டது.

இதன்போது குழந்தைகள் விடுதியின் மேற்கூரை மீது கொன்கிரீட் கலவை விழுந்ததால் கூரையின் சில பகுதிகள் விடுதியிலிருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் மீதும் விழுந்துள்ள நிலையில் காயமடைந்தனர்.

இந்த விபத்து காரணமாக மூன்று தாய்மார்கள் மற்றும் மூன்று குழந்தைகள் மேலதிக சிகிச்சைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து காரணமாக விடுதியிலிருந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்