வைஃபை இணைப்பை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து, வாக்குறுதி அளித்தப்படி இணைப்பை வழங்க தவறி, தனியார் நிறுவனம் ஒன்றில் 36 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தனியார் நிறுவனத்திடமிருந்து 36,989,684 ரூபா மோசடி செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
பொலிஸ் நிதி குற்றப்பபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் 34 மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும், மட்டக்குளிய மற்றும் வத்தளை பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களை எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.