கடந்த தேர்தல் காலங்களில் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளித்தவர்கள் தொடர்பான பெயர் பட்டியல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் திருகோணமலையில் இடம்பெற்றது.
இதன்போது, கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், உள்ளூராட்சிமன்ற தேர்தல், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளிப்பதற்கு அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்