
வெளிநாட்டு பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி
-பதுளை நிருபர்-
எல்ல பசறை வீதியில் அமைந்துள்ள சிறிய ஸ்ரீ பாதைக்கு இன்று வியாழக்கிழமை பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் தவறி விழுந்து பலத்த காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்
மேடலின் ரோஸ்மேரி பிரான்செஸ்கா என்ற 33 வயதுடைய பிரிட்டீஷ் நாட்டுப் பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
எல்ல பகுதியை பார்ப்பதற்காக வந்த இந்த பெண், இன்று சிறிய ஸ்ரீ பாதையை பார்ப்பதற்கு செய்வதற்காக மற்றவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த போது, இன்று காலை 10.45 மணியளவில் திடீரென வழுக்கி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் அம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பதுளை போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் பாலித ராஜபக்ஷவிடம் வினாவிய போது, எல்ல பகுதியில் இருந்து விழுந்த வெளிநாட்டு பெண் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் வலது கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
